வியாழன், 6 ஜூன், 2013

நான்.

எழுத மறுக்கும் என் பேனா
என் மனம்  பாரமானால்......

சிரிக்க மறுக்கும் என் உதடுகள்
என் சுயம் சிதைக்கப்பட்டால் .....

நினைக்க மறுக்கும் என் நெஞ்சம்
சோகம் எனும் மேகம் வந்தால்.....

பழக மறுக்கும் என் உள்ளம்
வேசமிட்ட  மோசமுகம் கண்டால்....

பேச மறுக்கும் என் வாய்
கோபமெனும் கேடுவந்தால் ....

உறங்க மறுக்கும் என் விழிகள்
உன்னதங்கள் உடைக்கப்பட்டால்.


2 கருத்துகள்:

  1. மூன்று வலைப்பூக்களை ஆரம்பித்திருக்கிறீர்கள். ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. இந்த வித்தியாசத்தைத் தொடர்ந்து காக்க முடியுமானால் வெற்றி உங்களுக்கே. கவிதை உங்களுக்கு நிச்சயம் கூடிவரும். நிறைய படியுங்கள். எழுதிய கவிதையை வாய்விட்டுப் படியுங்கள். சந்தம் கூடிவரும். உங்களிடம் திறமை இருக்கிறது. அதை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள். – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா. (chellappay@gmail.com)

    பதிலளிநீக்கு