சனி, 1 ஜூன், 2013

அழகான மாலையிலே ..

ரம்மியமானஓர் மாலையில் ,
இரண்டு மைனாக்கள்
தத்திக் கொத்தி விளையாடியது
ஒன்று நீ , மற்றொன்று நான் ...



தென்னை மரமிரண்டு
காற்றில் கலந்து
அசைந்தாடிக் கொண்டிருந்தது
ஒன்று நீ, மற்றொன்று நான்...



மரத்தில் குயில்கள் ரெண்டு 
இசையில் சங்கமித்தது
ஒன்று நீ, மற்றொன்று நான்....



இவற்றைக் கண்டு
மேலே முழு நிலவு
முகம் காட்டிச் சிரித்தது -அதில்
பாதி நீ,  மீதி நான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக